சனி, 08 August 2026
⚡ சமீபத்திய
நடமாடும் மண் பரிசோதனை மற்றும் விதை பரிசோதனை நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு! கொட்டரை நீர்த்தேக்கப் பணிகள் - நேரில் ஆட்சியர் ஆய்வு பாஜகவிலிருந்து விலகும் அண்ணாமலை -திராவிட கட்சிகளுக்கு மாற்றாகுமா? புதிய கலெக்டரை சந்தித்தார் எம்எல்ஏ சிவக்குமார்-பரஸ்பரம் வாழ்த்து! தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் கவனத்துக்கு… சென்னையில் மதிமுக அறப்போர் ஆர்ப்பாட்டம்-பெரம்பலூர் நிர்வாகிகள் திரளாக பங்கேற்பு குரும்பலூர் மகா மாரியம்மன் மாவிளக்கு திருவிழாவில் பாலபிஷேகம், சுவாமி திருவீதி உலா! தமிழ்நாடு அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் திறன் மேம்பாட்டு பயிற்சி பெரம்பலூர் அஸ்வின்ஸ் குழுமத்தின் அடுத்த முன்மாதிரி முயற்சி பேரளி துணை மின் நிலைய பராமரிப்பு பணி ஒத்திவைப்பு: ஜூன் 2-ல் வழக்கம்போல் மின் விநியோகம்! நடமாடும் மண் பரிசோதனை மற்றும் விதை பரிசோதனை நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு! கொட்டரை நீர்த்தேக்கப் பணிகள் - நேரில் ஆட்சியர் ஆய்வு பாஜகவிலிருந்து விலகும் அண்ணாமலை -திராவிட கட்சிகளுக்கு மாற்றாகுமா? புதிய கலெக்டரை சந்தித்தார் எம்எல்ஏ சிவக்குமார்-பரஸ்பரம் வாழ்த்து! தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் கவனத்துக்கு… சென்னையில் மதிமுக அறப்போர் ஆர்ப்பாட்டம்-பெரம்பலூர் நிர்வாகிகள் திரளாக பங்கேற்பு குரும்பலூர் மகா மாரியம்மன் மாவிளக்கு திருவிழாவில் பாலபிஷேகம், சுவாமி திருவீதி உலா! தமிழ்நாடு அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் திறன் மேம்பாட்டு பயிற்சி பெரம்பலூர் அஸ்வின்ஸ் குழுமத்தின் அடுத்த முன்மாதிரி முயற்சி பேரளி துணை மின் நிலைய பராமரிப்பு பணி ஒத்திவைப்பு: ஜூன் 2-ல் வழக்கம்போல் மின் விநியோகம்!
பெரம்பலூர் செய்திகள், தமிழக செய்திகள், அண்மை செய்திகள்

நானோ உரங்களைப் பயன்படுத்தி உரச் செலவைக் குறைத்து சமச்சீர் உர மேலாண்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்: வேளாண்துறை அறிவுரை!

18 மே 2026 Admin 15 பார்வைகள்
நானோ உரங்களைப் பயன்படுத்தி உரச் செலவைக் குறைத்து சமச்சீர் உர மேலாண்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்: வேளாண்துறை அறிவுரை!

பெரம்பலூர்: விவசாயிகள் தங்கள் சாகுபடியில் நானோ யூரியா மற்றும் நானோ டி.ஏ.பி உரங்களைப் பயன்படுத்தி, உரத்திற்கான அதிகப்படியான செலவைக் குறைத்து சமச்சீர் உர மேலாண்மையைக் கடைப்பிடிக்குமாறு பெரம்பலூர் மாவட்ட வேளாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பாபு  அறிவுரையின்படி, பெரம்பலூரில் உள்ள தனியார் உரம் விற்பனை நிலையங்களில் வேளாண்மை உதவி இயக்குநர் (தரகட்டுப்பாடு) அக்ரி டாக்டர் ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

போதுமான அளவில் நானோ உரங்கள் இருப்பு

ஆய்வுக்குப் பின் உதவி இயக்குநர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரம் விற்பனை நிலையங்களில் யூரியா, டி.ஏ.பி உரங்களுக்கு மாற்றாக 'நானோ யூரியா பிளஸ்' மற்றும் 'நானோ டி.ஏ.பி' திரவ உரங்கள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை அனைத்து வகையான நிலங்களுக்கும், அனைத்துப் பயிர்களுக்கும் ஒரு ஏக்கருக்கு அரை லிட்டர் (500 மி.லி) வீதம் பயன்படுத்தலாம். இதனால் உரச் செலவு குறைவதோடு, மண் வளம் காக்கப்பட்டு விவசாயிகள் அதிக மகசூலும், வருமானமும் பெற முடியும்.

விவசாயிகளுக்கான முக்கிய உர மேலாண்மை ஆலோசனைகள்:

  • யூரியாவை அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது: விவசாயிகள் எக்காரணத்தைக் கொண்டும் யூரியா உரத்தை அடி உரமாகப் பயன்படுத்தக் கூடாது. அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு 2 மூட்டைக்கு மேல் யூரியாவைப் பயன்படுத்த வேண்டாம்.

  • அடி உரம் பயன்பாடு: பயிர் நடவு செய்யும்போது அடி உரமாக காம்ப்ளக்ஸ், டி.ஏ.பி அல்லது ட்ரிபிள் சூப்பர் பாஸ்பேட் ஆகிய உரங்களையே பயன்படுத்த வேண்டும்.

  • களைக்கொல்லியுடன் கலக்கக் கூடாது: யூரியா உரத்தை எக்காரணத்தைக் கொண்டும் களைக்கொல்லியுடன் (Weedicide) சேர்த்து கலந்து பயன்படுத்தக் கூடாது.

  • இயற்கை மற்றும் உயிர் உரங்கள்: வேளாண்மை விரிவாக்க மையங்களில் கிடைக்கக்கூடிய அனைத்து வகையான உயிர் உரங்கள், பயிர்களுக்கேற்ற நுண்ணூட்டச் சத்து உரங்கள் மற்றும் பசுந்தாள் உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம், ரசாயன உரங்களின் தேவையைக் குறைத்து மண் வளத்தை மேம்படுத்தலாம்.

உர வியாபாரிகளுக்குக் கடுமையான எச்சரிக்கை:

ஆய்வின் போது உரம் விற்பனையாளர்களுக்கு உதவி இயக்குநர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார்:

  • உரம் விற்பனை நிலையங்களில் உரம் இருப்பு விவரம் மற்றும் விலைப்பட்டியலை பொதுமக்கள் பார்க்கும் வகையில் அவசியம் பலகையில் பராமரிக்க வேண்டும்.

  • விற்பனை நிலையத்தில் உள்ள இருப்புக்கும், பதிவேட்டிற்கும் எவ்வித முரண்பாடும் இருக்கக் கூடாது.

  • உரம் வைக்கப்பட்டிருக்கும் கிடங்குகளுக்கு (Godown) முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும். அனுமதி பெற்றுள்ள உரங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

விதிமுறைகளை மீறும் விற்பனை நிலையங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

பகிர்க