சனி, 08 August 2026
⚡ சமீபத்திய
நடமாடும் மண் பரிசோதனை மற்றும் விதை பரிசோதனை நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு! கொட்டரை நீர்த்தேக்கப் பணிகள் - நேரில் ஆட்சியர் ஆய்வு பாஜகவிலிருந்து விலகும் அண்ணாமலை -திராவிட கட்சிகளுக்கு மாற்றாகுமா? புதிய கலெக்டரை சந்தித்தார் எம்எல்ஏ சிவக்குமார்-பரஸ்பரம் வாழ்த்து! தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் கவனத்துக்கு… சென்னையில் மதிமுக அறப்போர் ஆர்ப்பாட்டம்-பெரம்பலூர் நிர்வாகிகள் திரளாக பங்கேற்பு குரும்பலூர் மகா மாரியம்மன் மாவிளக்கு திருவிழாவில் பாலபிஷேகம், சுவாமி திருவீதி உலா! தமிழ்நாடு அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் திறன் மேம்பாட்டு பயிற்சி பெரம்பலூர் அஸ்வின்ஸ் குழுமத்தின் அடுத்த முன்மாதிரி முயற்சி பேரளி துணை மின் நிலைய பராமரிப்பு பணி ஒத்திவைப்பு: ஜூன் 2-ல் வழக்கம்போல் மின் விநியோகம்! நடமாடும் மண் பரிசோதனை மற்றும் விதை பரிசோதனை நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு! கொட்டரை நீர்த்தேக்கப் பணிகள் - நேரில் ஆட்சியர் ஆய்வு பாஜகவிலிருந்து விலகும் அண்ணாமலை -திராவிட கட்சிகளுக்கு மாற்றாகுமா? புதிய கலெக்டரை சந்தித்தார் எம்எல்ஏ சிவக்குமார்-பரஸ்பரம் வாழ்த்து! தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் கவனத்துக்கு… சென்னையில் மதிமுக அறப்போர் ஆர்ப்பாட்டம்-பெரம்பலூர் நிர்வாகிகள் திரளாக பங்கேற்பு குரும்பலூர் மகா மாரியம்மன் மாவிளக்கு திருவிழாவில் பாலபிஷேகம், சுவாமி திருவீதி உலா! தமிழ்நாடு அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் திறன் மேம்பாட்டு பயிற்சி பெரம்பலூர் அஸ்வின்ஸ் குழுமத்தின் அடுத்த முன்மாதிரி முயற்சி பேரளி துணை மின் நிலைய பராமரிப்பு பணி ஒத்திவைப்பு: ஜூன் 2-ல் வழக்கம்போல் மின் விநியோகம்!
பெரம்பலூர் செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெறக்கோரி பெரம்பலூரில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

18 மே 2026 Admin 16 பார்வைகள்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெறக்கோரி பெரம்பலூரில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

பெரம்பலூர்: பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி, பெரம்பலூரில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் இன்று (18.05.2026) மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வாழ்வாதாரம் பாதிப்பு

பெரம்பலூர் காந்தி சிலை முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், "தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகச் சீர்குலைந்து வருகிறது. மக்களின் சுமையைக் கூட்டாமல், இந்த விலை உயர்வை மத்திய மோடி அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்" என வலியுறுத்திப் போராட்டக்காரர்கள் விண்ணதிர முழக்கங்களை எழுப்பினர்.

தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்பு

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு (CITU) மாவட்ட நிர்வாகி பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். எல்.பி.எஃப் (LPF) சார்பாக கே.கே.குமார், யு.டி.யு.சி (UTUC) சார்பாக கணி, ஏஐடிஇயுசி (AITUC) சார்பாக ராஜேந்திரன் மற்றும் சிஐடியு நிர்வாகிகள் ரெங்கநாதன், ரெங்கராஜ், கிருஷ்ணசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் குமாரவேல், கனகராஜ், எல்.பி.எஃப் செல்லதுரை, ரெங்கநாதன் உள்ளிட்ட திரளான தொழிலாளர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களது கண்டனக் குரலை வலுவாகப் பதிவு செய்தனர்.

பகிர்க