குரும்பலூர் மகா மாரியம்மன் மாவிளக்கு திருவிழாவில் பாலபிஷேகம், சுவாமி திருவீதி உலா!
பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் அருள்மிகு ஸ்ரீ நல்லசெல்லியம்மன் ஆகியோருக்கான ஊரணி பொங்கல் மாவிளக்கு திருவிழாவை முன்னிட்டு, நேற்று பால் குடம் எடுப்பு மற்றும் சுவாமி திருவீதி உலா ஆகியவை நடைபெற்றன.
இந்த வகையில், குரும்பலூரில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு நேற்று (ஜூன் 02) பால்குடம் அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து நேற்று மாலை அருள்மிகு ஸ்ரீ நல்லசெல்லியம்மன், அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு பொங்கல் மாவிளக்கு பூஜையும், இரவு சுவாமி புறப்பாடு அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
முன்னதாக நேற்று முன்தினம் ஸ்ரீஆலடி முத்துசாமி மற்றும் ஸ்ரீ ஆப்பூர் நல்லேந்திர சுவாமிகளுக்கு பொங்கல் மற்றும் மாவிளக்கு பூஜைகள் நடைபெற்றன.
இந்த ஆன்மிக நிகழ்வுகளில் குரும்பலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருகை தந்து ஸ்ரீ மகா மாரியம்மனின் திருவருள் பெற்று சென்றனர்.
