தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் கவனத்துக்கு…
தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் கவனத்துக்கு…
குறு, சிறு நடுத்தர தொழிற்கடன் முகாம் மூலம் பயன்பெறலாம்
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழிற்கடன் முகாம் திருச்சியில் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் (ஜூன் 01) தொடங்கிய இந்த சிறப்புக்கடன் முகாம், ஜூன் 30 வரை நடைபெற உள்ளது.
எண் 33, KRT பில்டிங், இரண்டாவது தளம், பிராமினேட் ரோடு, கண்டோன்மென்ட், திருச்சி – 620001 என்ற முகவரியில் நடைபெற்று வரும் இந்த முகாமில், தொழில் தொடங்க விருப்போருக்கான் பல்வேறு திட்டங்கள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானியங்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS), அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன் திட்டம் (AABCS) உள்ளிட்டவை குறித்த விரிவான விளக்கங்கள் அளிக்கப்படுகிறது.
தகுதியான தொழில்களுக்கு, தமிழக அரசின் 25% முதலீட்டு மானியம் ரூ.150 லட்சம் வரை வழங்கப்படும். இந்த ஆண்டு கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கப்படுகிறது.
புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழிலதிபர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து கடன் மற்றும் மானிய சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தகவலுக்கு, தொலைபேசி எண்கள் 0431-2460498, 4030028, அலைபேசி எண்கள் 94443 968805, 94450 23460 ஆகியவற்றைத் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அறி தெரிவித்துள்ளார்.
