பேரளி துணை மின் நிலைய பராமரிப்பு பணி ஒத்திவைப்பு: ஜூன் 2-ல் வழக்கம்போல் மின் விநியோகம்!
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், பேரளி துணை மின் நிலையத்தில் ஜூன் 2-ஆம் தேதி (நாளை) நடைபெற இருந்த மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் பொதுமக்கள் நலன் கருதி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.
வழக்கம்போல் மின் விநியோகம்
இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பேரளி துணை மின் நிலையத்தில் ஜூன் 2-ஆம் தேதி நடைபெறவிருந்த மாதாந்திர பராமரிப்பு பணிகள் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனால், ஜூன் 2-ஆம் தேதி பேரளி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வழக்கம்போல் மின் விநியோகம் இருக்கும்.
இந்த மாதத்திற்கான (ஜூன்) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் வேறு ஒரு நாளில் மேற்கொள்ளப்படும் என்றும், அந்தப் பணிகள் நடைபெறும் தேதி மற்றும் விவரங்கள் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் மின் வாரியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
