சனி, 08 August 2026
⚡ சமீபத்திய
நடமாடும் மண் பரிசோதனை மற்றும் விதை பரிசோதனை நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு! கொட்டரை நீர்த்தேக்கப் பணிகள் - நேரில் ஆட்சியர் ஆய்வு பாஜகவிலிருந்து விலகும் அண்ணாமலை -திராவிட கட்சிகளுக்கு மாற்றாகுமா? புதிய கலெக்டரை சந்தித்தார் எம்எல்ஏ சிவக்குமார்-பரஸ்பரம் வாழ்த்து! தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் கவனத்துக்கு… சென்னையில் மதிமுக அறப்போர் ஆர்ப்பாட்டம்-பெரம்பலூர் நிர்வாகிகள் திரளாக பங்கேற்பு குரும்பலூர் மகா மாரியம்மன் மாவிளக்கு திருவிழாவில் பாலபிஷேகம், சுவாமி திருவீதி உலா! தமிழ்நாடு அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் திறன் மேம்பாட்டு பயிற்சி பெரம்பலூர் அஸ்வின்ஸ் குழுமத்தின் அடுத்த முன்மாதிரி முயற்சி பேரளி துணை மின் நிலைய பராமரிப்பு பணி ஒத்திவைப்பு: ஜூன் 2-ல் வழக்கம்போல் மின் விநியோகம்! நடமாடும் மண் பரிசோதனை மற்றும் விதை பரிசோதனை நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு! கொட்டரை நீர்த்தேக்கப் பணிகள் - நேரில் ஆட்சியர் ஆய்வு பாஜகவிலிருந்து விலகும் அண்ணாமலை -திராவிட கட்சிகளுக்கு மாற்றாகுமா? புதிய கலெக்டரை சந்தித்தார் எம்எல்ஏ சிவக்குமார்-பரஸ்பரம் வாழ்த்து! தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் கவனத்துக்கு… சென்னையில் மதிமுக அறப்போர் ஆர்ப்பாட்டம்-பெரம்பலூர் நிர்வாகிகள் திரளாக பங்கேற்பு குரும்பலூர் மகா மாரியம்மன் மாவிளக்கு திருவிழாவில் பாலபிஷேகம், சுவாமி திருவீதி உலா! தமிழ்நாடு அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் திறன் மேம்பாட்டு பயிற்சி பெரம்பலூர் அஸ்வின்ஸ் குழுமத்தின் அடுத்த முன்மாதிரி முயற்சி பேரளி துணை மின் நிலைய பராமரிப்பு பணி ஒத்திவைப்பு: ஜூன் 2-ல் வழக்கம்போல் மின் விநியோகம்!
தமிழக செய்திகள்

என்றும் நன்றியுடன் இருப்பேன் - முன்னாள் அமைச்சர் சிவசங்கர் உருக்கம்

17 மே 2026 Admin 19 பார்வைகள்
என்றும் நன்றியுடன் இருப்பேன் - முன்னாள் அமைச்சர் சிவசங்கர் உருக்கம்

பாடாலூர், மே.18: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று அவர் ஆலத்தூர் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள கொளக்காநத்தம், அயினாபுரம், அணைப்பாடி, கொளத்தூர், கூடலூர், இலுப்பைக்குடி, பிலிமிசை, கூத்தூர், ஜெமீன்பேரையூர், புஜங்கராயநல்லூர், நொச்சிக்குளம், பாலம்பாடி, ஜெமீன் ஆத்தூர், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், மேத்தால், காரைப்பாடி, சில்லக்குடி, திம்மூர், அருணகிரிமங்கலம், மாக்காய்குளம் ஆகிய பகுதிகளில் சென்று வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்தார். இது தேர்தல் பிரச்சாரத்திற்கு நிகராக நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. அவருக்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி தொண்டர்கள் பொன்னாடை போர்த்தியும், பட்டாசுகள் வெடித்தும் வரவேற்றனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு சிவசங்கரை வாழ்த்தினர். நிகழ்ச்சிக்கு ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், முன்னாள் ஒன்றிய குழு தலைவருமான என்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசன் முன்னிலை வகித்தார்.

இதையடுத்து நொச்சிக்குளம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த எம்.எல்.ஏ. சா.சி.சிவசங்கர் பேசியதாவது: 

குன்னம் தொகுதி மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சட்டப்பேரவைத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினின் ஆதரவு வேட்பாளராக, கூட்டணி கட்சியான தேசிய முற்போக்கு திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஒத்துழைப்புடன் சட்டபேரவை தேர்தலை சந்தித்தேன். திமுக மற்றும் கூட்டணி கட்சி வாக்காளர்கள் என்னை வெற்றி பெற செய்ததற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். திமுக ஆட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குன்னம் தொகுதியில் உள்ள கொளக்காநத்தத்தில் அரசு கலைக்கல்லூரி திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. மின்சாரப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஒரு துணை மின்நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. குன்னத்தில் உள்ள முக்கிய ஊர்களுக்குமான மக்கள் செல்ல புதிய சாலை, புதிய பேருந்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. என்னுடைய சேவையை பாராட்டி தொகுதி மக்கள், வாக்களித்து எம்எல்ஏவாக தேர்வு செய்துள்ளீர்கள். அதற்கு நான் குன்னம் தொகுதி மக்களுக்கு நன்றி கடன் பட்டுள்ளேன். எதிர்க்கட்சியாக இருந்தாலும் சட்டமன்றத்திலே கழகத்தின் இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சிறப்பாக செயல்படுவோம். ஆளும் கட்சியாக இருந்ததுபோல எதிர்க்கட்சியாகவும் இருந்து செயல்படுவோம். குன்னம் தொகுதி மக்களின் வளர்ச்சிக்காக சட்டமன்றத்தில் தொடர்ந்து எனது குரல் ஒலித்து கொண்டிருக்கும். இத்தொகுதியில் மக்கள் 3-வது முறையாக வெற்றி பெற செய்திருப்பது பெருமையாக உள்ளது. உங்கள் வீட்டு பிள்ளையாக இருந்து தொடர்ந்து பணியாற்றுவதுடன், நன்றியுடன் இருப்பேன் என்று தெரிவித்து என்று கூறி, வரவேற்பு மற்றும் திகலமிட்ட மக்களுக்கு தனது நன்றியை கூறி கொண்டு விடை பெற்றார். இந்நிகழ்வில் கொளக்காநத்தம் முன்னாள்ஊராட்சி மன்ற தலைவர் ராகவன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுப்ரமணியன், மாவட்ட அமைப்பாளர்கள் சுந்தரராசு, பாலமுருகன், மாவட்ட பிரதிநிதிகள் ராஜேந்திரன், இளவரசு, ஒன்றிய நிர்வாகிகள் ராமசாமி, சக்திவேல், பிரபு, கிளை செயலாளர் துரை உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டணி கட்சியை சேர்ந்த விசிக உள்பட தேமுதிக மாவட்ட செயலாளர் துரை.சிவா ஐயப்பன் உள்ளிட்ட பலர் உடன் சென்றிருந்தனர்.

பட விளக்கம்:குன்னம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏ. சா.சி.சிவசங்கர் நேற்று கொளக்காநத்தம் கிராமத்தில் பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க