சனி, 08 August 2026
⚡ சமீபத்திய
நடமாடும் மண் பரிசோதனை மற்றும் விதை பரிசோதனை நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு! கொட்டரை நீர்த்தேக்கப் பணிகள் - நேரில் ஆட்சியர் ஆய்வு பாஜகவிலிருந்து விலகும் அண்ணாமலை -திராவிட கட்சிகளுக்கு மாற்றாகுமா? புதிய கலெக்டரை சந்தித்தார் எம்எல்ஏ சிவக்குமார்-பரஸ்பரம் வாழ்த்து! தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் கவனத்துக்கு… சென்னையில் மதிமுக அறப்போர் ஆர்ப்பாட்டம்-பெரம்பலூர் நிர்வாகிகள் திரளாக பங்கேற்பு குரும்பலூர் மகா மாரியம்மன் மாவிளக்கு திருவிழாவில் பாலபிஷேகம், சுவாமி திருவீதி உலா! தமிழ்நாடு அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் திறன் மேம்பாட்டு பயிற்சி பெரம்பலூர் அஸ்வின்ஸ் குழுமத்தின் அடுத்த முன்மாதிரி முயற்சி பேரளி துணை மின் நிலைய பராமரிப்பு பணி ஒத்திவைப்பு: ஜூன் 2-ல் வழக்கம்போல் மின் விநியோகம்! நடமாடும் மண் பரிசோதனை மற்றும் விதை பரிசோதனை நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு! கொட்டரை நீர்த்தேக்கப் பணிகள் - நேரில் ஆட்சியர் ஆய்வு பாஜகவிலிருந்து விலகும் அண்ணாமலை -திராவிட கட்சிகளுக்கு மாற்றாகுமா? புதிய கலெக்டரை சந்தித்தார் எம்எல்ஏ சிவக்குமார்-பரஸ்பரம் வாழ்த்து! தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் கவனத்துக்கு… சென்னையில் மதிமுக அறப்போர் ஆர்ப்பாட்டம்-பெரம்பலூர் நிர்வாகிகள் திரளாக பங்கேற்பு குரும்பலூர் மகா மாரியம்மன் மாவிளக்கு திருவிழாவில் பாலபிஷேகம், சுவாமி திருவீதி உலா! தமிழ்நாடு அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் திறன் மேம்பாட்டு பயிற்சி பெரம்பலூர் அஸ்வின்ஸ் குழுமத்தின் அடுத்த முன்மாதிரி முயற்சி பேரளி துணை மின் நிலைய பராமரிப்பு பணி ஒத்திவைப்பு: ஜூன் 2-ல் வழக்கம்போல் மின் விநியோகம்!
தமிழக செய்திகள்

அரசியலமைப்பு சட்டமே மேலோங்கி நிற்கும்: கட்சித் தாவல் புகாரில் சிக்கியவர் அமைச்சராவதைத் தடுக்க முடியும்! மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை விளக்கம்

18 மே 2026 Admin 13 பார்வைகள்
அரசியலமைப்பு சட்டமே மேலோங்கி நிற்கும்: கட்சித் தாவல் புகாரில் சிக்கியவர் அமைச்சராவதைத் தடுக்க முடியும்! மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை விளக்கம்

சென்னை:

"கட்சித் தாவல் தடைச் சட்ட புகாருக்கு ஆளாகிய ஒருவர் அமைச்சராவதைத் தடுக்கவும், நீதிமன்றம் மூலம் அவரைப் பதவி நீக்கம் செய்யவும் நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தில் தெளிவான வழிமுறைகள் உள்ளன. எல்லா நிலைகளிலும் அரசியலமைப்பு சட்டமே மேலோங்கி நிற்கும்," என்று மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள விளக்க அறிக்கை பின்வருமாறு:

சபாநாயகர் மற்றும் ஆளுநரின் அதிகாரங்கள்

அரசியலமைப்புச் சட்டத்தின் 10-வது அட்டவணை (10th Schedule), கட்சித் தாவல் தடைச் சட்ட புகாருக்கு ஆளாகும் ஒரு சட்டமன்ற உறுப்பினரை தகுதி நீக்கம் செய்யும் முழு அதிகாரத்தையும் சபாநாயகருக்கு வழங்குகிறது.

அதேபோல், அவ்வாறு புகாருக்கு உள்ளான ஒரு நபரை அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்கு முன்பாக, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு Article 163-ன் படி, முதலமைச்சரிடம் இது குறித்து விளக்கம் கேட்டு ஆளுநர் திருப்தி அடைவது அவசியமான ஒன்றாகும்.

உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரம் (Article 142)

கட்சித் தாவல் புகார் மீதான விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், அந்தப் புகாரை எதிர்கொள்ளும் நபர் அமைச்சராகப் பதவி வகித்தால், உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும். அரசியலமைப்புச் சட்டப் பிரிவு Article 142 வழங்கும் இந்தச் சிறப்பு அதிகாரத்தின் மூலம், சம்பந்தப்பட்ட நபரை உச்ச நீதிமன்றமே நேரடியாகப் பதவி நீக்கம் செய்ய முடியும்.

மணிப்பூர் மாநில வழக்கு முன்னுதாரணம்

இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக, மணிப்பூர் மாநில அமைச்சர் தௌனாஜம் ஷியாம்குமார் சிங் (Thounaojam Shyamkumar Singh) வழக்கில் கடந்த 2020-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைக் குறிப்பிடலாம்.

"எந்தவொரு அரசியல் சூழ்ச்சியாக இருந்தாலும், இறுதிப் புள்ளியில் நம்முடைய இந்திய அரசியலமைப்புச் சட்டமே எல்லாவற்றையும் விட மேலோங்கி நிற்கும். இதுவே நமது அரசியலமைப்புச் சட்டத்தின் ஆகச்சிறந்த சிறப்பம்சமாகும்" என்று மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பகிர்க