சனி, 08 August 2026
⚡ சமீபத்திய
நடமாடும் மண் பரிசோதனை மற்றும் விதை பரிசோதனை நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு! கொட்டரை நீர்த்தேக்கப் பணிகள் - நேரில் ஆட்சியர் ஆய்வு பாஜகவிலிருந்து விலகும் அண்ணாமலை -திராவிட கட்சிகளுக்கு மாற்றாகுமா? புதிய கலெக்டரை சந்தித்தார் எம்எல்ஏ சிவக்குமார்-பரஸ்பரம் வாழ்த்து! தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் கவனத்துக்கு… சென்னையில் மதிமுக அறப்போர் ஆர்ப்பாட்டம்-பெரம்பலூர் நிர்வாகிகள் திரளாக பங்கேற்பு குரும்பலூர் மகா மாரியம்மன் மாவிளக்கு திருவிழாவில் பாலபிஷேகம், சுவாமி திருவீதி உலா! தமிழ்நாடு அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் திறன் மேம்பாட்டு பயிற்சி பெரம்பலூர் அஸ்வின்ஸ் குழுமத்தின் அடுத்த முன்மாதிரி முயற்சி பேரளி துணை மின் நிலைய பராமரிப்பு பணி ஒத்திவைப்பு: ஜூன் 2-ல் வழக்கம்போல் மின் விநியோகம்! நடமாடும் மண் பரிசோதனை மற்றும் விதை பரிசோதனை நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு! கொட்டரை நீர்த்தேக்கப் பணிகள் - நேரில் ஆட்சியர் ஆய்வு பாஜகவிலிருந்து விலகும் அண்ணாமலை -திராவிட கட்சிகளுக்கு மாற்றாகுமா? புதிய கலெக்டரை சந்தித்தார் எம்எல்ஏ சிவக்குமார்-பரஸ்பரம் வாழ்த்து! தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் கவனத்துக்கு… சென்னையில் மதிமுக அறப்போர் ஆர்ப்பாட்டம்-பெரம்பலூர் நிர்வாகிகள் திரளாக பங்கேற்பு குரும்பலூர் மகா மாரியம்மன் மாவிளக்கு திருவிழாவில் பாலபிஷேகம், சுவாமி திருவீதி உலா! தமிழ்நாடு அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் திறன் மேம்பாட்டு பயிற்சி பெரம்பலூர் அஸ்வின்ஸ் குழுமத்தின் அடுத்த முன்மாதிரி முயற்சி பேரளி துணை மின் நிலைய பராமரிப்பு பணி ஒத்திவைப்பு: ஜூன் 2-ல் வழக்கம்போல் மின் விநியோகம்!
பெரம்பலூர் செய்திகள், அண்மை செய்திகள்

எசனை காட்டு மாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் நேர்த்திக்கடன்! - நாளை தேரோட்டம்

18 மே 2026 Admin 20 பார்வைகள்
எசனை காட்டு மாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் நேர்த்திக்கடன்! - நாளை தேரோட்டம்

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தில் அமைந்துள்ள, மிகச் சக்தி வாய்ந்த ஸ்தலமாகக் கருதப்படும் அருள்மிகு காட்டு மாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று (18.05.2026) ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

பாரம்பரிய ஐதீகம்

இக்கோவிலின் ஆண்டுத் திருவிழா கடந்த மே 10-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழா காலத்தில், மாரியம்மன் முதலில் தான் பிறந்த ஊரான சோமண்டாபுதூர் கிராமத்திற்குச் சென்று மூன்று நாட்கள் தங்கி அருள் பாலிப்பது பாரம்பரிய ஐதீகமாகும். அதன்படி, கடந்த மே 11, 12, 13 ஆகிய தேதிகளில் சோமண்டாபுதூர் கிராமத்தில் அம்மனுக்குச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு, பின்னர் எசனை கோவிலுக்கு அம்மன் கொண்டு வரப்பட்டார்.

பல்வேறு வாகனங்களில் வீதியுலா

அதனைத் தொடர்ந்து, நாள்தோறும் மாரியம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, சிம்ம வாகனம், பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

பிரம்மாண்ட அலகு ஊர்வலம்

விழாவின் முக்கிய நிகழ்வான நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வாய் அலகு, இடுப்பு அலகு மற்றும் அந்தரத்தில் தொங்கியபடி செல்லும் 'ஏரோப்ளேன் அலகு' குத்தியும், கைகளில் தீச்சட்டி ஏந்தியும் ஊர்வலமாக வந்தனர். கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இந்த ஊர்வலம் கோவிலை வந்தடைந்தது.

பின்னர், பெண் பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் அம்மனுக்குச் சிறப்புப் படையல் இட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் எசனை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாளை திருத்தேரோட்டம்

இத்திருவிழாவின் சிகர நிகழ்வான பிரசித்தி பெற்ற காட்டு மாரியம்மன் திருத்தேரோட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) மிக விமரிசையாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகத்தினரும், ஊர் பொதுமக்களும் செய்து வருகின்றனர்.


பகிர்க