சனி, 08 August 2026
⚡ சமீபத்திய
நடமாடும் மண் பரிசோதனை மற்றும் விதை பரிசோதனை நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு! கொட்டரை நீர்த்தேக்கப் பணிகள் - நேரில் ஆட்சியர் ஆய்வு பாஜகவிலிருந்து விலகும் அண்ணாமலை -திராவிட கட்சிகளுக்கு மாற்றாகுமா? புதிய கலெக்டரை சந்தித்தார் எம்எல்ஏ சிவக்குமார்-பரஸ்பரம் வாழ்த்து! தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் கவனத்துக்கு… சென்னையில் மதிமுக அறப்போர் ஆர்ப்பாட்டம்-பெரம்பலூர் நிர்வாகிகள் திரளாக பங்கேற்பு குரும்பலூர் மகா மாரியம்மன் மாவிளக்கு திருவிழாவில் பாலபிஷேகம், சுவாமி திருவீதி உலா! தமிழ்நாடு அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் திறன் மேம்பாட்டு பயிற்சி பெரம்பலூர் அஸ்வின்ஸ் குழுமத்தின் அடுத்த முன்மாதிரி முயற்சி பேரளி துணை மின் நிலைய பராமரிப்பு பணி ஒத்திவைப்பு: ஜூன் 2-ல் வழக்கம்போல் மின் விநியோகம்! நடமாடும் மண் பரிசோதனை மற்றும் விதை பரிசோதனை நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு! கொட்டரை நீர்த்தேக்கப் பணிகள் - நேரில் ஆட்சியர் ஆய்வு பாஜகவிலிருந்து விலகும் அண்ணாமலை -திராவிட கட்சிகளுக்கு மாற்றாகுமா? புதிய கலெக்டரை சந்தித்தார் எம்எல்ஏ சிவக்குமார்-பரஸ்பரம் வாழ்த்து! தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் கவனத்துக்கு… சென்னையில் மதிமுக அறப்போர் ஆர்ப்பாட்டம்-பெரம்பலூர் நிர்வாகிகள் திரளாக பங்கேற்பு குரும்பலூர் மகா மாரியம்மன் மாவிளக்கு திருவிழாவில் பாலபிஷேகம், சுவாமி திருவீதி உலா! தமிழ்நாடு அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் திறன் மேம்பாட்டு பயிற்சி பெரம்பலூர் அஸ்வின்ஸ் குழுமத்தின் அடுத்த முன்மாதிரி முயற்சி பேரளி துணை மின் நிலைய பராமரிப்பு பணி ஒத்திவைப்பு: ஜூன் 2-ல் வழக்கம்போல் மின் விநியோகம்!
பெரம்பலூர் செய்திகள், அண்மை செய்திகள்

பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

18 மே 2026 Admin 11 பார்வைகள்
பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்  உத்தரவு!
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் பெரம்பலூர் மாவட்டத்திற்கு வழங்கப்படும் நீரின் அளவு எவ்வளவு, அதில்  பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவு என்ன, எவ்வளவு கால இடைவெளியில் குடிநீர் வழங்கப்படுகின்றது என்பது குறித்து விரிவாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார். 
 
மேலும், நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் குடிநீர் பற்றாக்குறை, குழாய் உடைப்பு, பொதுமக்களுக்கு சரிவர குடிநீர் வழங்கப்படாதது  உள்ளிட்ட குடிநீர் வழங்குவதில் இடர்பாடுகள் உள்ளதாக வெளிவந்த செய்திகளுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.
மேலும், நகராட்சி, பேரூராட்சி மற்றும்  ஊராட்சிகளில் குடிநீர் பற்றாக்குறை இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்து, போதுமான அளவு குடிநீர் விநியோகம் செய்திடவும்,  பொதுமக்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் சீரான குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என்றும் ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநருக்கும்,  நகராட்சி ஆணையர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கும் ஆட்சியர் உத்தரவிட்டார்.
குடிநீர் விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவித்தால் தனிக்கவனம் செலுத்தி அந்த புகாரின் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.  
 
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சு.தேவநாதன், ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநர் திரு. ரமேஷ், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

பகிர்க