மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே நேரில் சென்று கோரிக்கை மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சியர்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (18.05.2026) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே நேரில் சென்று, மாவட்ட ஆட்சியர் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டு மனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன், இலவச தையல் இயந்திரம், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 308 மனுக்கள் பெறப்பட்டன.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.கண்ணன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சுந்தர்ராமன், மாவட்ட வழங்கல் அலுவலர் ந.சக்திவேல், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் வீ.வாசுதேவன் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் அனைத்துத் துறைகளின் முதல் நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
