சனி, 08 August 2026
⚡ சமீபத்திய
நடமாடும் மண் பரிசோதனை மற்றும் விதை பரிசோதனை நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு! கொட்டரை நீர்த்தேக்கப் பணிகள் - நேரில் ஆட்சியர் ஆய்வு பாஜகவிலிருந்து விலகும் அண்ணாமலை -திராவிட கட்சிகளுக்கு மாற்றாகுமா? புதிய கலெக்டரை சந்தித்தார் எம்எல்ஏ சிவக்குமார்-பரஸ்பரம் வாழ்த்து! தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் கவனத்துக்கு… சென்னையில் மதிமுக அறப்போர் ஆர்ப்பாட்டம்-பெரம்பலூர் நிர்வாகிகள் திரளாக பங்கேற்பு குரும்பலூர் மகா மாரியம்மன் மாவிளக்கு திருவிழாவில் பாலபிஷேகம், சுவாமி திருவீதி உலா! தமிழ்நாடு அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் திறன் மேம்பாட்டு பயிற்சி பெரம்பலூர் அஸ்வின்ஸ் குழுமத்தின் அடுத்த முன்மாதிரி முயற்சி பேரளி துணை மின் நிலைய பராமரிப்பு பணி ஒத்திவைப்பு: ஜூன் 2-ல் வழக்கம்போல் மின் விநியோகம்! நடமாடும் மண் பரிசோதனை மற்றும் விதை பரிசோதனை நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு! கொட்டரை நீர்த்தேக்கப் பணிகள் - நேரில் ஆட்சியர் ஆய்வு பாஜகவிலிருந்து விலகும் அண்ணாமலை -திராவிட கட்சிகளுக்கு மாற்றாகுமா? புதிய கலெக்டரை சந்தித்தார் எம்எல்ஏ சிவக்குமார்-பரஸ்பரம் வாழ்த்து! தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் கவனத்துக்கு… சென்னையில் மதிமுக அறப்போர் ஆர்ப்பாட்டம்-பெரம்பலூர் நிர்வாகிகள் திரளாக பங்கேற்பு குரும்பலூர் மகா மாரியம்மன் மாவிளக்கு திருவிழாவில் பாலபிஷேகம், சுவாமி திருவீதி உலா! தமிழ்நாடு அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் திறன் மேம்பாட்டு பயிற்சி பெரம்பலூர் அஸ்வின்ஸ் குழுமத்தின் அடுத்த முன்மாதிரி முயற்சி பேரளி துணை மின் நிலைய பராமரிப்பு பணி ஒத்திவைப்பு: ஜூன் 2-ல் வழக்கம்போல் மின் விநியோகம்!
பெரம்பலூர் செய்திகள்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 308 மனுக்கள் பெறப்பட்டன!

18 மே 2026 Admin 51 பார்வைகள்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 308 மனுக்கள் பெறப்பட்டன!

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி தலைமையில் இன்று (18.05.2026) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இருப்பிடத்திற்கே சென்று மனுக்களைப் பெற்ற ஆட்சியர்

இந்தக் கூட்டத்தின் சிறப்பம்சமாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் அமர்ந்திருந்த இடத்திற்கே நேரடியாகச் சென்று, அவர்களின் கோரிக்கை மனுக்களை கனிவோடு கேட்டறிந்து பெற்றுக் கொண்டார்.

308 கோரிக்கை மனுக்கள்

பொதுமக்களிடமிருந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் அடிப்படை வசதிகள் வேண்டி வரப்பெற்ற கோரிக்கைகள் குறித்து அதிகாரிகள் விரிவாகப் பரிசீலித்தனர். இதில்,

  • முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, விதவை மற்றும் ஆதரவற்றோர் உதவித்தொகை,

  • தொழில் தொடங்க கடன் உதவி மற்றும் கல்விக் கடன் கோருதல்,

  • இலவச தையல் இயந்திரம், வீட்டு மனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல்,

  • குடிநீர், சாலை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் கோருதல்,

உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 308 மனுக்களை பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர். இந்த மனுக்களின் மீது உடனடியாக விசாரணை நடத்தி, தகுதியான பயனாளிகளுக்கு விரைந்து தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

கலந்துகொண்ட அதிகாரிகள்:

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) க.கண்ணன், சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சுந்தர்ராமன், மாவட்ட வழங்கல் அலுவலர் ந.சக்திவேல், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் வீ.வாசுதேவன் மற்றும் அனைத்து அரசுத் துறைகளின் முதல் நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க